தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைக்கு அடிமையானவர் வயிற்றிலிருந்த 63 ஸ்பூன்கள் ; அதிர்ச்சியில் மருத்துவர்கள் - வயிற்றிலிருந்த 63 ஸ்பூன்கள்

உத்தரப் பிரதேசம் அருகே போதைக்கு அடிமையான ஓர் நபரின் வயிற்றிலிருந்து 63 ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.

போதைக்கு அடிமையானவர் வயிற்றிலிருந்த 63 ஸ்பூன்கள் ; அதிர்ச்சியில் மருத்துவர்கள்
போதைக்கு அடிமையானவர் வயிற்றிலிருந்த 63 ஸ்பூன்கள் ; அதிர்ச்சியில் மருத்துவர்கள்

By

Published : Sep 28, 2022, 4:27 PM IST

முஸாஃப்பர் நகர்:போபாடா கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் பல நாட்களாக போதைக்கு அடிமையாகி வந்துள்ளார். இதனையடுத்து, இவரை ஷாம்லியுலுள்ள ஓர் மறுவாழ்வு மையத்தில் இவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.

அங்கு ஒரு மாத காலம் இருந்த விஜய்யின் உடல்நிலை மிக மோசமானதாக தெரிகிறது. இதனையடுத்து, இவரை போபா ராட்டில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு விஜய்யின் வயிற்றுக்குள் 63 ஸ்பூன்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

வயிற்றில் எப்படி இத்தனை ஸ்பூன்கள் சென்றதென குழப்பமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது வயிற்றில் இருந்த ஸ்பூன்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தனர்.

இந்நிலையில், விஜய்யின் குடும்பத்தார் அந்த மறுவாழ்வு மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் யாரேனும் விஜய்க்கு இதை வழுக்கட்டாயமாக கொடுத்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட விஜய்யும் தற்போதுவரை எந்த கருத்தும் கூறவில்லை, மேலும் மருத்துவர்கள் காவல் துறையினர் என அனைவரும் இந்த விவகாரத்தில் அமைதி காத்துவருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிஎப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details