சிவான்:பிகாரில் உள்ள சிவான் சிறையில் உள்ள முஸ்லிம் பெண் கைதிகள் சிறைக்குள் சாத் பூஜை செய்ய, சிறை நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பூர்வாஞ்சல் (கிழக்கு உ.பி. மற்றும் பீகார்) மக்களிடையே பிரபலமான பண்டிகையான சாத் பூஜை அக்டோபர் 30 - 31 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்துப் பெண்கள் இந்த விழாவில் முழங்கால் அளவு தண்ணீரில் அர்க்யா செய்கிறார்கள்.
சிவான் சிறையில், மத நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் முஸ்லிம்கள் உட்பட 15 பெண் கைதிகள் சாத் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்காகப் பூஜை பொருட்கள் முதல் ஆடைகள் மற்றும் அலங்காரங்கள் வரையிலான ஏற்பாடுகளுக்குச் சிறை நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. சிறைக்குள்ளேயே பெண்கள் அர்க்யா செய்வதற்கு வசதியாக சிமெண்ட் பூசப்பட்ட குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.