தமிழ்நாடு

tamil nadu

தான் படித்த பள்ளிக்குச் சென்று நெகிழ்ந்தார் திரௌபதி முர்மூ...!

By

Published : Nov 11, 2022, 10:57 PM IST

ஒடிசா பயணம் மேஏற்கொண்டு வரும் இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மூ,இரண்டாவது நாளான இன்று(நவ.11) தான் படித்த பள்ளிக்குச் சென்று பழைய நினைவுகூர்ந்து உணர்ச்சிப் பொங்கத் ததும்பினார்.

தான் படித்த பள்ளிக்குச் சென்று உணர்ச்சிவசமானார் திரௌபதி முர்மூ...!
தான் படித்த பள்ளிக்குச் சென்று உணர்ச்சிவசமானார் திரௌபதி முர்மூ...!

புவனேஸ்வர்: ஒடிசா பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஜனாதிபதி திரௌபதி முர்மூ தனது பள்ளிக்குச் சென்று தனது பாலிய காலத்தை நினைவு கூர்ந்து உணர்ச்சிமிக்க கண்கலங்கினார். தன்னுடைய ஒடிசா பயணத்தின் இரண்டாவது நாளான இன்று(நவ.11), 70களில் தான் படித்த அரசு மகளிர் பள்ளிக்குச் சென்றார் திரௌபதி முர்மூ. மேலும், பள்ளி காலங்களில் தான் வசித்த குந்தாலா குமாரி சபாத் ஆதிவாசி விடுதிக்குச் சென்றார்.

அதுமட்டுமின்றி, தன்னுடன் படித்த சக பள்ளிவாசிகளில் 13 பேரை சந்தித்து, தன்னுடைய பள்ளி மாணவ, ஆசிரியர்கள் முன்பு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ஆங்கு தன் பள்ளி காலம் குறித்து நினைவு கூர்ந்த திரௌபதி முர்மூ, “நான் எனது பள்ளி படிப்பை உபர்பேடா பள்ளியில் தான் தொடங்கினேன். அங்கு பள்ளிக் கட்டடமெல்லாம் இருக்காது, கூரை வீட்டில் தான் நாங்கள் படிப்போம்.

நாங்கள் படிக்கும் காலத்தில் வகுப்பறையை சுத்தம் செய்வோம், பள்ளி வாசலில் மாட்டு சானம் தெளித்து சுத்திகரிப்போம். அந்த காலத்தில் மாணவர்கள் எந்த வித மனத் தடைகளுமின்றி படித்தார்கள். நீங்களும் கடினமாக உழைத்து படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் காலத்தில் வெளியுலகை புரிந்துகொள்ள வலைதளம், தொலைக்காட்சி போன்றவைகளெல்லாம் இல்லை.

அதனால் எனக்கு வெளியிலிருக்கும் எவரும் எனை உந்தவைக்கும் நபர்களாக நான் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆகையால், நான் எனது பாட்டியையே எனது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டேன். எனது பாட்டி மனரீதியாக மிக வலிமையானவர், அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்” என்றார்.

ஜனாதிபதி திரௌபதி மர்மூவை பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும், தான் வசித்த பள்ளி விடுதி அறைக்குச் சென்று தான் படுத்த கட்டிலை பார்த்த திரௌபதி முர்மூ சற்று உண்ர்ச்சிப் பொங்கித் ததும்பினார் என அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறினார்.

மேலும், தனது பள்ளி விடுதியில் மரவிதைகளை விதைத்தார். அதன் பின்பு பள்ளியில் தன்னுடன் படித்த சக மாணவர்களை அழைத்து அவர்களை சந்தித்தார் திரௌபதி முர்மூ. இதுகுறித்து முர்மூவின் சக பள்ளிவாசியான சின்மயி மோஹந்தி கூறுகையில், “இந்தியாவின் ஜனாதிபதியே எங்களை அழைத்தது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவானது. எங்கள் உணர்வை எங்களால் விவரிக்க முடியவில்லை. நாட்டின் முதல் குடிமகளே எங்களின் பள்ளி நண்பராக அமைந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார்.

இது குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மூ தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் பயின்ற பள்ளிக்கும், விடுதிக்கும் சென்றது என் வாழ்வில் பழைய நினைவுகளை நினைவு கூறும் கணமாக இருந்தது. என் மாணவ வாழ்க்கையின் பல நினைவுகளை இந்த சந்திப்பு நினைவிற்கு தந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக' - PMயிடம் CM கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details