காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சௌக் நோக்கி முன்னதாக பேரணி மேற்கொண்டனர்.
ராகுல் காந்தி கண்டனம்
இந்தப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, இன்று நாங்கள் வெளியே வந்து உங்கள் முன் பேசுகிறோம். இதுவொரு ஜனநாயகப் படுகொலை.
60 விழுக்காடு மக்களின் குரலுக்கு நாடாளுமன்றம் மதிப்பளிக்காமல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. 60 விழுக்காடு மக்களின் குரல் ஒடுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தாக்கப்படுவது இதுவே முதல்முறை. எம்.பிக்களை தாக்க வெளி நபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.