தெலங்கானா மாநிலம் நாலங்கோடு மாவட்டத்திற்குட்பட்ட முனுகோடு தொகுதியில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். இதனால் முனுகோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (நவ 3) நடைபெற்று வருகிறது. இதில் பாஜகவில் இணைந்த கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி பாஜக சார்பிலும், 2018 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த குசுகுந்தலா பிரபாகர் ரெட்டி ஆளும் டிஆர்எஸ் கட்சி சார்பிலும், காங்கிரஸ் வேட்பாளராக பால்வை ஸ்ரவந்தி ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.