தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நூபுர் ஷர்மா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

பாஜக முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா மீது மும்பரா காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூபுர் ஷர்மா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நூபுர் ஷர்மா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

By

Published : Jun 7, 2022, 7:36 PM IST

தானே (மகாராஷ்டிரா): பாஜக தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

ஈரான், கத்தார், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட 15 நாடுகள் ஆளும் பாஜக கட்சி நிர்வாகி நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இஸ்லாமிய அமைப்புகள் நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தன. அதனடிப்படையில் இன்று (ஜூன் 7) நூபுர் ஷர்மா மீது 153A,153B, 295A, 298, 505 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நூபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், மும்பரா காவல் துறையினர் நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், ஜூன் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

முன்னதாக நேற்று (ஜூன் 6) நூபுர் ஷர்மா, தனக்கு பல்வேறு நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகக் கூறி, டெல்லி காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து நூபுர் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நூபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல்: டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details