தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரயிலில் பாலியலில் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் : டெல்லியில் தொடரும் அவலம்! - டெல்லி பயங்கரம்

டெல்லி : மும்பையில் ஓடும் ரயிலில் 25 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெளியே தள்ளப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியன் வன்கொடுமை
பாலியன் வன்கொடுமை

By

Published : Dec 27, 2020, 4:01 PM IST

டெல்லி, வாஷி பே பாலத்தில் அமைந்துள்ள ரயில் தடங்களுக்கு அருகே 25 வயது நிரம்பிய பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை ரயில் இயக்குபவர் ஒருவர் பார்த்து, சம்பந்தப்பட்ட ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். அதன் பின் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உதவிக் காவல் ஆய்வாளர் பவுசாஹேப் ஷிண்டே, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து, ஜேஜே மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. விசாரணையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள்மீது பாலியல் வன்புணர்வு, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்குற்றச் செயல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் சோதனை செய்துவருகின்றனர். பாதிக்கபட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details