தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

26/11 மும்பை தாக்குதல் - பொது மக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி.... - 14 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

மும்பை தாக்குதல் அஞ்சலி
மும்பை தாக்குதல் அஞ்சலி

By

Published : Nov 26, 2022, 12:36 PM IST

மகாராஷ்டிரா:26 நவம்பர் 2008 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய கொடூர குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 160க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இன்றுடன் மும்பை தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. 14ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிர அளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தலைமைச் செயலாளர், காவல் துறை அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தாக்குதலில் கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர், பொதுமக்கள் நினைவிடத்தில் மலர்களை வைத்து கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:நகைக்கடையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை... கொள்ளையர்கள் கைவரிசை

ABOUT THE AUTHOR

...view details