தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை? - விசாரணை

ஆபாச பட விவகாரத்தில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவி ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Shilpa Shetty
Shilpa Shetty

By

Published : Jul 23, 2021, 6:37 AM IST

மும்பை: ஆபாச படங்களை எடுத்து சில செயலிகளில் வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் காவலர்கள் சில இடங்களில் ரெய்டு நடத்தினார்கள்.

இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான வியன் தொழில் நிறுவனத்தில் காவலர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது மடிக்கணினி, கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஆபாச காணொலிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. ஆபாச காணொலிகள் பதிவேற்றிய வழக்கில் ராஜ் குந்த்ரா ஜூலை 23ஆம் தேதி காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போனும் தடயவியல் ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆபாச பட பதிவேற்றம் விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் காவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : ஆபாச நடிகைகளுக்கு சில ஆயிரங்கள் கொடுத்த ராஜ் குந்த்ரா!

ABOUT THE AUTHOR

...view details