மும்பை:மகாராஷ்டிராவில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் வேனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பல்வேறு ரயில் சேவைகள் தடைபட்டன. காலை 8.43 மணியளவில், ஷாலிமார் எக்ஸ்பிரஸ் லோக்மான்ய திலக் டெர்மினஸ் இடையே சென்றுகொண்டிருந்த போது பார்சல் வேனில் தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக உள்ளூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், ரயில்வே ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். காலை 9.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேல்நிலை கம்பியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.