தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாய கொடுத்து மாட்டிக்கிட்டியே பங்கு! - அமிதாப் பச்சன், அனுஷ்கா மீது மும்பை போலீஸ் நடவடிக்கை! - அனுஷ்கா சர்மா

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மா மீது மும்பை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

Traffic Violation
Traffic Violation

By

Published : May 16, 2023, 12:40 PM IST

ஐதராபாத் : மும்பை போக்குவரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அவர்கள் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தன் சமூகவலைதள பக்கத்தில் மஞ்சள் சட்டை மற்றும் டரவுசர் அணிந்திருந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் புகைப்படத்தை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். மேலும் அந்த பதிவில், "நன்றி நண்பரே.. தீர்க்க முடியாத மும்பை போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் குறித்த நேரத்தில் ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றதற்கு நன்றி... என பதிவிட்டு உள்ளார்.

மும்பை போலீசாரை மறைமுகமாக சாடும் வகையில் இந்த பதிவு இருந்தாலும், அமிதாப் பச்சனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இருப்பினும் ஒரு சிலர் நெட்டிசன்கள், அமிதாப் பச்சன் ஹெல்மட் அணியாமல் சாலை போக்குவரத்து வீதிகளை மீறியதாக கூறி தொடர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, நடிகர் அமிதாப் பச்சனை போல், நடிகை அனுஷ்கா சர்மாவும், ரசிகர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி வேகமாக பரவியது. பிரபலங்களை பின்தொடர்ந்து அவர்களை புகைப்படம் எடுக்கும் பாப்பரசி ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் வேகமாக பரவியது.

இந்த இரு புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரசிகர்கள், ஹெல்மட் அணியாமல் போக்குவரத்து விதிமீறல்கள் நடைபெற்றதாக மும்பை போலீசாரை டேக் செய்தனர். இந்நிலையில், நெட்டிசன்களின் பதவிக்கு பதிலளித்த மும்பை காவல்துறை, சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் போக்குவரத்து போலீசார் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Mumbai police tweet

விளம்பரத்திற்காக செய்த செயல்களா என்று தெரியாத நிலையில், இரு சினிமா பிரபலங்கள் போக்குவரத்து விதிகளை மீறி நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டு உள்ள சம்பவம் திரைப் பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் நாக் அஸ்வினின் பிராஜெக்ட் கே என்ற படத்தில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான ஷூட்டிங்கிற்கு செல்லும் போது தான் இந்த பிரச்சினையில் அவர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பிராஜெக்ட் கே படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்தி, தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது.

அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படமான சாக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க :"வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன்” - வரலட்சுமி சரத்குமார்!

ABOUT THE AUTHOR

...view details