மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபராவில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மும்பை போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அதனடிப்படையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நலசோபராவுக்கு விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான மெபெட்ரோன் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மகாராஷ்டிராவில் ரூ.1,400 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - மும்பையில் மெபெட்ரோன் கடத்தல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.1,400 கோடி மதிப்புள்ள 700 கிலோவுக்கும் அதிகமான மெபெட்ரோனை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் எடை 700 கிலோவுக்கும் அதிகம் என்றும் இதன் சந்தை மதிப்பு ரூ.1,400 கோடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது. MD என்றழைக்கப்படும் Mephedron போதைப்பொருளானது, போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (NDPS) தடுப்பு சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டதாகும்.
இதையும் படிங்க:குஜராத் ரூ.450 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்