ஆபாச வீடியோ எடுத்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குந்தராவை கைது செய்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் குந்தரா ஆஜராவார் என அவரின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்தார். இந்த வழக்கு குறித்த, குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் மும்பை சைபர் காவல்துறை சமர்ப்பித்தது.
ஆபாசப் படம் எடுத்த புகார்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மீது குற்றப்பத்திரிகை - raj kundara
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா மீது ஆபாசப் படம் எடுத்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மீது ஆபாச படம் எடுத்ததாக வழக்கு
அதில், ராஜ் குந்தரா எடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் அந்த ஆபாச வீடியோ மும்பையின் இரு நட்சத்திர விடுதிகளில் எடுக்கப்பட்டு, பின் பல ஓடிடி தளங்களில் திரையிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் மாடல் அழகிகளான செர்லின் சோப்ரா, பூனம் பாண்டே மற்றும் திரைப்பட இயக்குநர் மீட்டா ஜுன்ஜுன்வாலா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.