தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாதா சோட்டா ராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர் - 6 பேர் மீது வழக்குப்பதிவு! - சோட்டா ராஜனுக்கு பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து பேனர் மற்றும் கபடி போட்டி நடத்திய 6 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சோட்டா ராஜனுக்கு பிறந்த நாள்
சோட்டா ராஜனுக்கு பிறந்த நாள்

By

Published : Jan 14, 2023, 7:25 PM IST

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமான சோட்டா ராஜன், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் தாவூத் இப்ராஹிமுடன் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக 'டி' கம்பெனியை விட்டு வெளியேறிய சோட்டா ராஜன் தனிப்பட்ட முறையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

70க்கும் மேற்பட கிரிமினல் வழக்குகள் சோட்டா ராஜன் மீது நிலுவையில் உள்ள நிலையில், இந்தோனேசியாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவானார். கடந்த 2015ஆம் ஆண்டு சோட்டா ராஜனை போலீசார் கைது செய்தனர். சோட்டா ராஜன் மீது கொலை வழக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அரசு தரப்பில் போதிய ஆதாரங்களை சமர்பிக்கத் தவறியதாகக் கூறி கொலை வழக்கில் இருந்து கடந்த நவம்பர் மாதம் சோட்டா ராஜனை விடுவித்து உத்தரவிட்டது. பழைய வழக்குத்தொடர்பாக சோட்டா ராஜன் தொடர்ந்து திகார் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், மும்பை மலாட் பகுதியில் சோட்டா ராஜன் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி சிலர் பேனர் வைத்துள்ளனர். மேலும் இன்றும்(ஜன.14), நாளையும்(ஜன.15) கபடி போட்டி நடத்துவதாக போஸ்டர் அடித்துள்ளனர். இதுகுறித்த தகவல் மும்பை போலீசாருக்குத் தெரிய வந்த நிலையில், பேனரை அகற்றிய போலீசார், சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:எஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details