மும்பை:குடியரசு தினமான இன்று (ஜன 26) சர்ச்சைக்குரிய மலாட் விளையாட்டு வளாகத்திற்கு, 18 ஆம் நூற்றாண்டின் மைசூரு தலைவர் திப்பு சுல்தானின் பெயரை சூட்டுவதை முன்னிட்டு, அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வளாகத்திற்கு திப்பு சுல்தானின் பெயரிடப்படும் என காங்கிரஸ் தலைவர் அஸ்லம் ஷேக் முன்பு அறிவித்தார். இது வலதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் இந்து தேசியவாதிகளிடமிருந்து நிறைய விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் பொருளாதார தலைநகரில் உள்ள பாஜக தொண்டர்கள் அப்பகுதியில் உள்ள அதர்வா கல்லூரியில் ஒன்று கூடி, அங்கிருந்து விளையாட்டு மைதானத்திற்கு எதிர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விளையாட்டு வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.