மும்பை: தென் கொரிய நாட்டை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். மும்பை நகர வீதிகளில் ஊர் சுற்றிப் பார்பதை நேரலையாக அந்த தென் கொரிய பெண் யூடியூபர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சாலையில் நின்ற இளைஞர் ஒருவர், தென் கொரிய பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து பேச முயல்கிறார். இளைஞரின் பிடியில் இருந்து தென் கொரிய பெண் விலக முயன்ற நிலையில், இளைஞர் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும், அங்கிருந்து தப்பி சாலையில் நடந்து சென்ற பெண்ணைa, தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த அதே இளைஞர் தன்னுடன் வண்டியில் ஏறுமாறு வலுக்கட்டாயபடுத்துகிறார். தன் வீடு அருகில் தான் உள்ளது எனக் கூறி தென் கொரிய பெண் இளைஞர்களை விட்டு விலகினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவத் தொடங்கியது.
தென் கொரிய பெண் யூடியூபருக்கு 'லைவ்'வில் பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக வலைதளத்தில் மக்கள் கருத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இணையத்தில் வைரலான வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மோபீன் சந்த் மொகத் ஷயிக் மற்றும் மொகத் நகிப் சதரிலம் அன்சா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வேட்புமனுவில் போலி தகவல்: முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ரத்து!