மும்பையில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கடத்தல் மற்றும் விற்பனையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச கொரியர் அலுவலகத்தில் இருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிராம் ஹெராயினை அலுவலர்கள் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.