தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லிவின் பார்ட்னரை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த நபர்.. மும்பையில் நடந்தது என்ன? - குக்கர்

மகாராஷ்டிராவில் லிவின் பாட்னரை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த நபரை ஜூன் 16ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 9, 2023, 4:59 PM IST

Updated : Jun 9, 2023, 7:49 PM IST

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மனோஜ் சானே 56). இவர் அங்குள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு ஆஷ்ரமத்தில் இருந்து வந்தவர் சரஸ்வதி வைத்தியா (வயது 34). இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆண்டு ரேஷன் கடையில் வைத்து சந்தித்து அதன் பின் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மீரா ரோடு குடியிருப்பு பகுதியில் குடியேறிய இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தான் மனோஜ் சானே தனது லிவின் பாட்னரான சரஸ்வதியை வீட்டிற்குள் வைத்து மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மனோஜ் சானேவின் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:Odisha Train Accident: ஒடிசாவில் மற்றொரு சோகம் - சரக்கு ரயில் ஏறியதில் 6 தொழிலாளர்கள் பலி!

தடயவியல் துறை அதிகாரிகளுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாருக்கு அங்கிருந்து சரஸ்வதியின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அது மட்டுமின்றி சரஸ்வதியை வெட்ட பயன்படுத்திய கத்தி, சுத்தியல் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், மனோஜ் சானே, சரஸ்வதியின் உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்தும், குக்கரில் போட்டு வேக வைத்தும் தெரு நாய்களுக்கு கடந்த 2 நாட்களாக உணவளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்த அத்தனை தடையங்களையும் கைப்பற்றிய போலீஸார் மனோஜ் சானேவையும் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டதாகவும், வெளியில் தெரிந்தால் தன் மீது பழி வரும் என பயந்து இவ்வாறு வெட்டி நாய்களுக்கு உணவளித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஜூன் 16ஆம் தேதி வரை மனோஜ் சானேவை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இதுபோன்று கடந்த ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. லிவின் வாழ்கையில் இருந்த ஷ்ரத்தா வாக்கர் மற்றும் அப்தாப் அமீன் பூனாவல்லா ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அமீன், ஷ்ரத்தா வாக்கரை கொன்று, ரம்பத்தால் 35 துண்டுகளாக அறுத்து பல்வேறு பகுதிகளில் வீசிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Durg-Puri Express: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து.. துர்க் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து

Last Updated : Jun 9, 2023, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details