தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 15 முதல் தொடக்கம்!

மும்பை புறநகர் ரயில் சேவைகள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும், கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Mumbai local trains
Mumbai local trains

By

Published : Aug 9, 2021, 6:51 AM IST

Updated : Aug 9, 2021, 6:57 AM IST

மும்பை: இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து, நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இதனிடையே, மூன்றாவது அலை ஏற்படும் அபாயமும் உள்ளது. இருப்பினும், மக்களின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, மும்பை புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.

அதற்கான, பாதுகாப்பு அளவுகோல்கள் கட்டாயம் பின்பற்றப்படும். புறநகர் ரயில்களில் பயணம் செய்ய, பயணிகள் கட்டாயம் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். பயண அட்டையை ஸ்மார்ட்போன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன் இல்லாத பயணிகள், நகராட்சி வார்டு அலுவலகங்கள், புறநகர் ரயில் நிலையங்களில் பயண அட்டையை பெற்றுக்கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஹால்டிபாரி-சிலாஹாட் ரயில் பாதையில் சரக்கு ரயில் சேவை தொடக்கம்!

Last Updated : Aug 9, 2021, 6:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details