தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டை விட்டு தப்ப மாட்டேன் - நீதிமன்றத்தில் ஆர்யன் கான் உறுதி

எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல மாட்டேன் என ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Aryan Khan
Aryan Khan

By

Published : Oct 8, 2021, 4:51 PM IST

அரபிக் கடலில் சொகுசுக் கப்பல் ஒன்றில் நடந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஆர்யன் கான் பிணை கோரிய நிலையில், அதன் விசாரணை மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கானின் வழக்கறிஞர் நீதிபதிமுன் வாதிடுகையில், " நான் இந்தியன். எனது பெற்றோர் இந்தியாவில் வசிக்கின்றனர். என்னிடம் இந்தியா பாஸ்போர்ட் உள்ளது. நான் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்.

மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனவே, நிச்சயம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டேன்" என்றார்.

அதேவேளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜித் சிங், " ஆர்யன் கான் மற்றும் ஆசித் ஆகியோரின் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம் பெரிய அளவில் போதைப் பொருள் பரிவர்த்தனை நடைபெற்றது அம்பலமாகியுள்ளது.

எனவே, ஆர்யன் கானுக்கு பிணைத் தரக்கூடாது" என வாதிட்டுவருகிறார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:68 ஆண்டுகள் கழித்து டாடா வசமானது ஏர் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details