மும்பை: மாகாராஷ்டிரா மாநிலம் மும்பை சைபர் க்ரைம் போலீசாருக்கு கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த புகார்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் லோன் செயலி மீதே கொடுக்கப்பட்டன. அதோடு வாங்கிய கடனை கட்டிய பிறகும் தங்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டல் விட்டு பணம் கேட்பதாக புகார்களில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் லோன் மோசடி... 14 பேர் கைது... ரூ.14 கோடி முடக்கம்... - ஆன்லைன் லோன் மோசடி
மகாராஷ்டிராவில் ஆன்லைன் லோன் செயலி மூலம் பணம் வாங்கிய வாடிக்கையாளர்களின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டிவந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம் போலீசார் இரண்டு வாரங்களில் பெங்களூரு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 பேரை கைது செய்தனர். இவர்களின் 350 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அதோடு ரூ.14 கோடி ரூபாய் பணம், 2.17 லட்சம் டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முடக்கப்பட்டன. இவர்கள் கடன்கொடுத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை.. இந்தா வாங்கிக்கோ... ஆன்லைன் லோன் மோசடியில் சிக்கித் தவிக்கும் இளம்பெண்கள், இளைஞர்கள்!