ஸ்ரீநகர்:நீண்ட ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் காஷ்மீரின் ஸ்ரீநகர் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் இன்று (அக்-1) திரைப்படங்களை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஒரே நேரத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த விக்ரம் வேதா மற்றும் தென்னிந்தியத் திரைப்படமான பொன்னியின் செல்வன் 1 ஆகிய 2 படங்கள் திரையிடப்பட்டன.
மல்டிபிளக்ஸ் உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான விஜய் தார் இதுகுறித்து கூறுகையில், ‘ஸ்ரீநகர் நகரின் ஷிவ்புரா பகுதியில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் 520 பேர் அமரக்கூடிய மூன்று திரைகள் உள்ளன. ஆனால், தற்போது 2 திரைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன’ எனக் கூறினார். மேலும் இரண்டு படங்களுக்கான டிக்கெட் விலை டிக்கெட் விலை ரூ.260 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.