வெலிங்டன்:நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள கெர்மடெக் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளி 1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. காலை 6.40 மணிக்கும், அதைத் தொடர்ந்து 6.55 மணிக்கும் என அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
முதல் நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்கு ராட்சத அலைகள் எழும்பும் வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம், ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருப்பின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.