தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 5, 2022, 9:42 PM IST

ETV Bharat / bharat

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்புக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் - உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் அணை பாதுகாப்புச் சட்டம் 2021இன் கீழ், கண்காணிப்புக் குழுவே மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்பு குழு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் - நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்பு குழு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் - நீதிமன்றம்

டெல்லி:முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் அணை பாதுகாப்புச்சட்டம் 2021இன் கீழ் கண்காணிப்புக்குழுவே மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த நீதிமன்ற அறிவிப்பு வரும் வரை தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒன்றிய அரசுகள் இதைக் கருத்தில் கொண்டு அணையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்புக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணைக்கு முன்னதாக அதை பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது

அணை பாதுகாப்பு இருமாநிலங்களும் வாதம்:இந்தச் சட்டத்தின்கீழ் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் (NTSA) ஓராண்டில் முழுமையாகச் செயல்படும் என்றும், ஒரு மாதத்திற்குள் தற்காலிக கட்டமைப்பு செயல்படத் தொடங்கும் என்றும் மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த ஆலோசனையை வழங்கியது. இந்த அமர்வில் நீதியரசர்கள் A.M.கான்வில்கார், அபாய் S ஒகா , C.T.ரவி குமார் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். இந்த முல்லைப்பெரியாறு அணை மிக பாதுகாப்பாக உள்ளதாகவும், தண்ணீர் அளவை அதிகரிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு தரப்பில் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கேரளா அரசு அணை பாதுகாப்பான நிலையில் இல்லை என்றும்; அதை இடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறது.

கண்காணிப்புக்குழுவை பலப்படுத்துவோம்:கண்காணிப்புக்குழுவிற்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் உத்வேகத்துடன் குழுவினால் செயல்படுத்த முடியும். இதற்கு முந்தைய அமர்வில் உச்ச நீதிமன்றம், இரு மாநிலங்களையும் கூடிப் பேசி இப்பிரச்னையை இணக்கமாக தீர்த்துக்கொள்ளுமாறு கூறியிருந்தது.

கமிட்டியில் இருதரப்பு தலைமைச் செயலாளர்களும் ஒரு வல்லுநரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து 'கண்காணிப்புக்குழுவை நாங்கள் நிச்சயம் பலப்படுத்துவோம். கண்காணிப்புக்குழுவினால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இதுகுறித்து எப்போதுவேண்டுமென்றாலும் நீதிமன்றத்தை அணுகலாம்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முல்லை பெரியாறு.. நாளை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details