லக்னோ: முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ், இவரின் மனைவி அபர்ணா யாதவ். இவருக்கு 2017 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை, பாஜகவின் ரீட்டா பகுணாவிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள சூழலில் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தால் அது அக்கட்சிக்கு லாபமாக அமையும். ஏனெனில் அக்கட்சியில் இருந்து வரிசையாக இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை (ஒபிசி) சேர்ந்த தலைவர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்துவருகின்றனர்.