குருகிராம்: உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (81) உடல்நலக் குறைவு காரணமாக குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
அண்மைக் காலமாக முலாயம் சிங் யாதவ் முதுமை காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார். அரசியல் மற்றும் கட்சி பணிகளை அவரது மகனும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கவனித்துவருகிறார். எனினும் முலாயம் சிங் யாதவ்வை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து சந்தித்துவந்தனர்.