ரமலான் பண்டிகையைப் போலவே, பிறை தெரிவதையொட்டி இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை இன்று (ஆகஸ்ட்.20) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் மொஹரமும் ஒன்று.