ஹைதரபாத்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, கோல்ஃப் விளையாடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை நிறுத்திவிட்டாலும், இன்னும் உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் சமீபத்தில் தனது அணியை ஐபிஎல் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மேலும், 2024 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் அணியை வழிநடத்துவார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இது ஒரு ஆஃப் சீசன் என்பதினால் தோனி தற்போது அமெரிக்காவில் தனது ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் அனுபவித்து வருகிறார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய கால் இறுதி ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கண்டு களித்தார்.
இதையும் படிங்க:காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொலை - தூத்துக்குடி அருகே நடந்த பகீர் சம்பவம்!
மேலும் தோனியை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது நேஷனல் கோல்ப் கிளப்பில் அவருடன் கோல்ப் விளையாட ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப் பெட்மின்ஸ்டரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடி உள்ளார். அந்த புகைப்படத்தை தோனி நண்பர் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஹிதேஷ் சங்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்த நிகழ்வை எற்படுத்தியதற்கு நன்றி ஜனாதிபதி என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தில், தோனி நீல நிறத்தில் டி-சர்ட்டில் கையுறைகளுடன் காணப்பட்டார். டொனால்டு டிரம்ப் ஒரு வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் சிவப்பு நிற தொப்பி அணிந்திருந்தார். தொப்பியில் MAGA (Make America Great Again) என எழுதியிருந்தது. இது அவரது தேர்தல் பிரச்சார குறிச்சொல்லாகும்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோல்ப் விளையாடியுள்ள புகைபடம் தற்போது வெளியாகி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:Actor Marimuthu : குணசித்திர நடிகர் மாரிமுத்து மறைவு! சீரியல் டப்பிங்கின் போது திடீர் மாரடைப்பால் மரணம்!