டெல்லி:நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 5 மாநில தேர்தலின் காரணமாக நேற்று (டிச.04) தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை 19 நாட்கள், இந்த ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இந்நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (டிச.05) நாட்டில் நிலவும் பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய், சுஷில் குமார் மோடி, ஆதித்ய பிரசாத் மற்றும் ஷம்பு சரண் படேல் ஆகியோர் மாநிலங்களவையில் 'நாட்டின் பொருளாதார நிலை' குறித்த விவாதத்தைத் தொடங்க உள்ளனர். மேலும், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.