தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்தியப் பிரதேச இளைஞரின் மயக்கும் மாளிகை கட்டடம்! - 5 முதல் 7 மணி வரை செலவிட்டுள்ளார்

மத்தியப் பிரதேச இளைஞர் சத்பால் என்பவர் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தின் மாதிரிகளை உருவாக்கி அனைவரையும் வியப்பி ஆழ்த்தியுள்ளார்.

மத்திய பிரதேச இளைஞரின் மயக்கும் மாளிகை கட்டடம்!
மத்திய பிரதேச இளைஞரின் மயக்கும் மாளிகை கட்டடம்!

By

Published : Apr 3, 2022, 8:51 PM IST

குவாலியர் :மத்தியப் பிரதேசத்தின் மோரினா மாவட்டத்தில் உள்ள உத்தமபுரா கிராமத்தில் சத்பால் சிங் ரோக்தக் என்ற ஒரு இளைஞர் வசித்து வருகிறார்.

பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனது. இருப்பினும் அவரது முயற்சியால் பல வரலாற்று கட்டடங்களை உருவாக்குகிறார், இவை காண்போரை வியப்படைய செய்கிறது.

சத்பாலின் தந்தை அதே கிராமத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். தந்தைக்கு உதவி செய்யும் சத்பாலுக்கு சிறுவயது முதலே மரத்தால் பல மாதிரி கட்டடங்களை உருவாக்கி வந்துள்ளார்.

இவர் செய்த தாஜ்மஹால் கட்டிடத்தின் மாதிரி உருவாக்கம் தத்ரூபமாக காட்சியளித்துள்ளது. மேலும் தற்போது மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த மாளிகையான ஜெய்விலாஸ் மாளிகையின் மாதிரியை உருவாக்கியுள்ளார்.

ஜெய்விலாஸ் மாளிகையின் முக்கிய நுணுக்கமான வடிவங்களையும், அதன் தோட்டங்கள் அதில் இருக்கும் மரம், கொடி என அனைத்தின் வடிவத்தையும் அழகாக வடிவமைத்துள்ளார். இதனை வடிவமைதற்காக 5 முதல் 7 மணி வரை செலவிட்டுள்ளார்.

மேலும் இதற்கு சத்பாலுக்கு 80ஆயிரம் வரை செலவானதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாநிலத்தில் உள்ள ஜெய்விலாஸ் மாளிகை மிகவும் பிரம்மாண்டமான ஒன்றாகும். இதனை இதற்கு முன்னர் எந்த கலைஞரும் வடிவமைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச இளைஞரின் மயக்கும் மாளிகை கட்டடம்!

இதையும் படிங்க:ஹைதராபாத்தில் ISIS ஆதரவாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details