தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Sexual harassment : கூட்டுப்பாலியல் பலாத்காரம்

Sexual harassment : மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் மனைவியை கணவன் உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தொடர்பாக அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Sexual harassment : கணவன் உட்பட 5 பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம்
Sexual harassment : கணவன் உட்பட 5 பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம்

By

Published : Jan 17, 2022, 7:22 AM IST

இந்தூர்:Sexual harassment : 32 வயது நிரம்பிய இளம் பெண்ணை கணவன் உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், கணவன்,அவரின் நண்பன்,வேலைக்காரன் என ஐந்து பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன் உடலில் சிகரெட்டை வைத்து சூடு போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.மேலும்,இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பாலியல் வன்கொடுமை நவம்பர் 2019 மற்றும் அக்டோபர் 2021 - ற்கும் இடையே நடந்தேறியதாகத் தெரிகிறது.விசாரணையில்,இந்தப் பெண் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும்,இவர் தன் கணவனான ராஜேஷ் விஸ்வகர்மாவை ’மேட்ரிமோனியல் சைட்’(Matrimonial site) மூலம் திருமணம் செய்ததும் தெரியவந்தது. இந்தப் பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து,அந்தப்பெண்னின் கணவர் ராஜெஷ் விஸ்வகர்மா, அன்கீட் பகேல்,விவேக் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Sexual harassment: கேரள விமான நிலைய அலுவலர் பணியிடைநீக்கம்

ABOUT THE AUTHOR

...view details