தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கான சேவையை மறந்துள்ளனர் - எம்பி வைத்திலிங்கம் - Tamil News

ஆட்சியில் இருப்பவர்கள் கரோனா தொற்று காலத்தில் மக்களுக்கான சேவையைச் செய்யாமல் மறந்து இருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எம்பி வைத்திலிங்கம்
எம்பி வைத்திலிங்கம்

By

Published : Jun 2, 2021, 11:07 AM IST

புதுச்சேரி: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று (ஜூன் 1) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்று பாதிப்பு, இறப்பும் மிக அதிக அளவில் புதுச்சேரியில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக இங்குமங்குமாகத் தேடும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படிச் செல்லும் நேரத்தில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் உயிரிழப்பிற்கு ஆளாகின்றனர்.

தற்போது ஒரு மாத காலத்தில் 812 உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உதவிசெய்வதற்கு யாரும் இல்லை, எங்கு யாரை சந்தித்து உதவி பெறுவது என்று அல்லாடிவருகின்றனர். மேலும் மருத்துவமனைக்குச் சென்றால் இறந்துவிடுவோமோ? உயிர் போனாலும் குடும்பத்தினரிடையே இறக்கலாம் என்று வீட்டிலேயே இருந்து மருத்துவம் பெற்றுக்கொண்டு இறந்தவர்கள் இந்த எண்ணிக்கை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

சுனாமியின்போது ஏற்பட்ட உயிர் இழப்பைவிட, தற்போது அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சிசெய்ய மக்களால் இனம் காட்டப்பட்டவர்கள் மருத்துவ வசதி கிடைக்க, உதவி கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் உதவி கேட்பதற்கு யாரும் இல்லை, யாரிடம் சொல்லி அழுவது என்றுகூட தெரியாத நிலையில் உள்ளது.

மக்களுக்கான குறைகளை நிவர்த்திசெய்ய அவர்களுக்கு என்ன தடை உள்ளது. அவர்களுக்குரிய பதவியை கேட்பது அவர்களது உரிமை, ஆனால் மக்களுக்கான சேவையைச் செய்யாமல் மறந்திருக்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலத் துணைநிலை ஆளுநராக இருப்பவர் ஆட்சியில் இருப்பவர்கள் செய்யாததை முனைந்து செய்துவருகின்றார். தனது அதிகார எல்லையைத் தாண்டி செய்கிறார். ஆனால் மக்களால் தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எதையும் செய்யவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: #HBD இசைஞானி இளையராஜா: “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியத்தின் பேரரசன்”

ABOUT THE AUTHOR

...view details