கந்த்வா: மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த என்ஜிஓவில் பணிபுரியும் இரண்டு பெண்கள், பணி நிமித்தமாக கந்த்வாவுக்கு சென்றனர். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அலுவலக காரணமாக அறை எடுத்து தங்கியிருந்தனர். நள்ளிரவில் கண் விழித்து பார்த்தபோது, அந்த பெண்களின் படுக்கையில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் படுத்திருந்ததாக தெரிகிறது. அவர்கள் சத்தம் போட்டதும் அந்த ஊழியர் தப்பியோடிவிட்டார்.
நள்ளிரவில் கண் விழித்த பெண்மணிக்கு காந்திருந்த ஷாக் - கந்த்வா ஹோட்டலில் சம்பவம்
ஹோட்டலில் தங்கியிருந்த பெண்களின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் தொந்தரவு செய்த ஹோட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
MP
இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரியும் பலிராம் பாட்டீல் (22) என்ற இளைஞர்தான் பெண்களிடம் அத்துமீறியவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நள்ளிரவில் ஜன்னல் வழியாக அந்த பெண்களின் அறைக்குள் சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பலிராமை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது