போபால்:மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். இந்த விபத்து நேற்றிரவு 11.30 மணியளவில் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் நடந்துள்ளது.
இவருடன் சென்ற மற்றொரு பயிற்சி விமானிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விமானம் கீழே விழுந்து கோயில் மற்றும் மரத்தின் மீது மோதியுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், விமானி விஷால் யாதவ் (30) என்பவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்,