மும்பை:மகாராஷ்டிரா முதமைச்சர் வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணா இருவரும் அறிவித்தனர். இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மீது போலீசில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், ஏப்ரல் 23ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இருவரும் ஜாமீன் கோரினர். ஆனால், நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப். 29ஆம் தேதி நடத்தப்படும் என்று கூறி, இருவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.