நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. குவாலியரில் மூன்று கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பிரதியுமான் சிங் தோமர், ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மலன்பூர் இண்டஸ்ட்ரீஸில் உள்ள சூர்யா ரோஷ்னி தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.