தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவியின் இறுதிச் சடங்கிற்காக 130 கி.மீ., தூரம் சைக்கிள் பயணம் செய்த பெரியவர் - மத்தியப் பிரதேசத்தின் ரவி பிரசாத் சைக்கிள் பயணம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கு எடுக்க ஒருவர் 130 கி.மீ., தூரத்தை சைக்கிளில் கடந்த சென்ற துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரவி பிரசாத் மாலி
ரவி பிரசாத் மாலி

By

Published : May 12, 2021, 10:52 PM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அகர் மால்வா கிராமத்தைச் சேர்ந்தவர், ரவி பிரசாத் மாலி (58). இவரது மனைவி நீண்ட காலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். கடந்த 8ஆம் தேதி, ரவி பிரசாத்தின் மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

வெளியூரில் வேலை செய்த ரவி பிரசாத்துக்கு தனது மனைவியின் மறைவுச் செய்தி தாமதமாகவே வந்துள்ளது. உடனடியாக, கிராமத்திற்குச் செல்ல ரவி முயற்சி செய்த நிலையில், கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, அவருக்கு வாகனம் ஏதும் கிடைக்கவில்லை.

பொறுத்திருந்து பார்த்த ரவி, தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சொந்த ஊரை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். வழியில் உணவே எடுத்துக்கொள்ளாமல், சுமார் 130 கி.மீ., தொலைவை 13 மணி நேரத்தில் கடந்து கிராமத்திற்கு வந்த ரவி, தனது மனைவிக்கு இறுதிச் சடங்கை செய்து முடித்தார்.

மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கு எடுக்க 130 கி.மீ., தூரம் சைக்கிள் பயணம் செய்த பெரியவர்

கோவிட்-19 பாதிப்பு சாமானியப் பொது மக்களின் அன்றாட அத்தியாவசிய நடவடிக்கையைக் கூட எவ்வாறு பெருமளவில் பாதித்துள்ளதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

இதையும் படிங்க:மருத்துவத் துறைக்கு புத்துணர்ச்சி சிகிச்சை தேவை

ABOUT THE AUTHOR

...view details