தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வழக்கில் சிக்கிய கபீர் ஆசிரமம்... சட்டவிரோத கட்டடத்தை இடிக்க உத்தரவு! - மண்டல மேஜிஸ்ட்ரேட் பிரியா வர்மா,

லக்னோ: மத்தியப் பிரதேசம் கபீர் ஆசிரமம் மீதான பாலியல் குற்றம் வெளிவந்ததையடுத்து, சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஆசிரம கட்டடத்தை இடித்திட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

லக்னோ
லக்னோ

By

Published : Nov 26, 2020, 2:05 PM IST

மத்திய பிரதேசத்தின் தேவாஸில், கபீர் ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் வசிக்கும் 22 வயதான உடல் ஊனமுற்ற பெண்ணை, ஆசிரம ஊழியர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த குற்றச்சம்பவம், அப்பெண் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஆறு பெண்களை ஆசிரமத்திலிருந்து மீட்டுள்ளனர். தற்போது, அனைத்து பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆசிரமத்தின் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதை இடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மண்டல மேஜிஸ்திரேட் பிரியா வர்மா, "கபீர் ஆசிரமம் 1500 சதுர அடி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரமம் சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பல புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். பாலியல் தொந்தரவுகளும் அரங்கேறி வருவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது உறுதியானதால் இடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச அரசு, ஆசிரமத்திற்கு 450 சதுர அடி நிலத்தை மட்டுமே வழங்கியது, ஆனால் 1500 சதுர அடிக்கு கட்டுமானத்தை கட்டியுள்ளனர். மேலும், ஆசிரமத்தின் பாலியல் வழக்கை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதுவரை 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details