தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எரிபொருள் விலையேற்றம் சாமானியர்கள் மீது தொடுக்கும் வன்முறை - ஜோதிமணி சாடல் - mp jothimani on fuel price hike

புதுச்சேரி: எரிபொருள் விலை ஏற்றம் சாதாரண மக்கள் மீது தொடுக்கும் வன்முறை என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி சாடியுள்ளார்.

mp jothimani
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

By

Published : Jul 16, 2021, 7:27 PM IST

புதுச்சேரி: கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கரோனா காலத்தில் எரிபொருள் விலையேற்றம் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் 23 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, வேளாண் பொருள்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரி விதித்துள்ளது. தோல்வியடைந்த ஒன்றிய அரசால், தற்போது பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. எரிபொருள் விலை ஏற்றம் சாதாரண மக்கள் மீது தொடுக்கும் வன்முறை.

பெட்ரோல் விலை அதிகரிப்பு

பெட்ரோல் தற்போது 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் எளிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் 66 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில் கலால் வரி 23 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரி உயர்த்தப்பட்டதால்தான் அனைத்தும் விலை உயர்ந்துவருகிறது.

மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பேட்டி

விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. வரி உயர்வால் ஒன்றிய அரசு ரூபாய் 24 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளது. பால், எண்ணெய், நெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்தும் விலை உயர்ந்துவிட்டது.

இன்று காங்கிரஸ் சார்பில் அனைத்து மாநிலங்களிலும், ஒன்றிய அரசின் ஊழலை வெளிக் கொண்டுவரும் நிகழ்வு தொடங்கியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பெட்ரோல் வரி என்னும் பெயரில் வழிப்பறி - சசி தரூர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details