தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதம்மாறி திருமணம் செய்ய வற்புறுத்தல்: இஸ்லாமிய வழக்கறிஞர் மீது இந்து பெண் புகார்!

மத்தியப்பிரதேசத்தில் இஸ்லாமிய வழக்கறிஞர் ஒருவர், மதம் மாறி தன்னை திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுவதாக, திருமணமான இந்து பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Hindu
Hindu

By

Published : Nov 15, 2022, 8:42 PM IST

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த திருமணமான இந்து பெண்மணி ஒருவர், இஸ்லாமிய வழக்கறிஞர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், "எனது வீட்டருகே வசிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஃப்தாப் பதான், நான் எனது கணவரை பிரிந்து, பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறி அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். நடுரோட்டில் எனது கையைப் பிடித்து இழுத்து, அச்சுறுத்தினார். அவர் கூறுவதைக் கேட்கவில்லை என்றால், என்னை கொன்றுவிடுவேன் என மிரட்டினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன்னை துன்புறுத்தி வரும் வழக்கறிஞர் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அந்தப் பெண்மணி எச்சரித்தார்.

இந்த பெண்மணியின் குற்றச்சாட்டுகளை அஃப்தாப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஃப்தாப், "எனது வீட்டின் முன்பு வசிக்கும் பெண், தொடர்ந்து என்னை பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வருகிறார். அவர் கூறும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை. அவர் மீது விலங்குகள் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததால், பழிவாங்கும் நோக்கில் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, அந்த பெண்மணி மீது பலமுறை புகார் அளித்தும், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், இந்தூர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து முழுமையான விசாரணை நடத்த கோருவேன்" என்றார்.

இந்த விஷயத்தில் பெண்மணி அளித்தப் புகாரின் பேரில், வழக்கறிஞர் அஃப்தாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காந்திநகர் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வளர்ப்பு மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த ராணுவ வீரர் கைது

ABOUT THE AUTHOR

...view details