மத்தியப் பிரதேசம்:மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாமல் பல வினோத நிகழ்வுகள் நடந்தன. தற்போது அந்த வரிசையில் ஹர்தா மாவட்டத்தில் உள்ள ஹண்டியா கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லகான் லால் பிலாலா என்பவர் அவரது பதவியை மற்றொருவருக்கு 50 ரூபாய் ஸ்டாம்ப் பத்திரத்தில் எழுதி கொடுத்துள்ளார்.
இது அம்மாநில உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது. இது குறித்து பதிலளித்த பிலாலா தரப்பு, ‘ பிலாலாவிற்கு படிப்பறிவின்மை இல்லாததால் இந்த பதவியில் முறையாக பணியாற்ற முடியாது எனவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் படிப்பறிவில்லாதவர்கள் என்றும், இச்செயல் சட்டத்துக்கு எதிரானதாக இருந்தாலும், பஞ்சாயத்துத் தலைவராக தனது கடமைகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து ஆவணங்கள் மூலம் அவருக்கு வழிகாட்ட ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.