மும்பை: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் சமீர். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகர். டிச.27 அன்று சல்மான் கான் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரை காண செல்ல திட்டமிட்டுந்தார் சமீர். ஆனால் முடியாமல் போனாது. இப்போது சல்மான் கானை சந்திப்பதற்கு மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து சைக்கிளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
சல்மான் கானை சந்திக்க 1,100 கி.மீ. சைக்கிளில் சென்ற ரசிகர் - சல்மான் கான் ரசிகர்
பிரபல நடிகர் சல்மான் கானை சந்திக்க அவரது தீவிர ரசிகர் ஒருவர் 1,100 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சல்மான் கானை சந்திக்க 1,100 கி.மீ. சைக்கிளில் சென்ற ரசிகர்!
அதன்படி கிளம்பி 1,100 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு, இறுதியாக சல்மான் கானின் வீட்டுக்கு வந்தடைந்தார். அதேநேரம் சல்மான் கானும் நல்வாய்ப்பாக வீட்டில் இருந்துள்ளார். அதனையடுத்து சமீரின் வருகையை அறிந்த சல்மான் கான், அவரை வரவழைத்து சிறிது நேரம் பேசியுள்ளார். தொடர்ந்து சல்மான் கான் உடன் சமீர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:வளைவால் மயக்கிய வானதியின் புகைப்படத்தொகுப்பு