இந்தூர் (மத்திய பிரதேசம்):மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.9) தொடங்கி வைக்கிறார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களை போற்றும் வகையில் இந்த விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சிறப்பு விருந்தினர்களாக தென் அமெரிக்காவின் கயானா அதிபர் முகமது இர்பான் அலியும், சுரினாம் அதிபர் சந்திரிகா பர்சாத் சந்தோகியும் கலந்து கொள்கின்றனர். அதோடு 70 வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான குடியேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 'சுரக்ஷித் ஜாயென், பிரஷிக்ஷித் ஜாயென்' என்ற தலைப்பில் ஒரு நினைவு அஞ்சல் தலைவெளியிடப்பட உள்ளது.