குவாலியர் (மத்தியப் பிரதேசம்): பிராண வாயு கிடைக்காமல் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நகரத்திலேயே உள்ள பெரிய அரசு மருத்துவமனையான கம்லா ராஜாவில் நிகழ்ந்துள்ளது.
தொடரும் ஆக்ஸிஜன் மரணங்கள்: ம.பியில் 10 பேர் உயிரிழந்த சோகம்! - national news in tamil
குவாலியரில் உள்ள கம்லா ராஜா மருத்துவமனையில் 10 பேர் பிராணவாயு (ஆக்ஸிஜன்) கிடைக்காமல் உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களான பிரவீன் பதக்கும், சதீஷ் சிக்காவரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து, அங்குப் பிராணவாயு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இச்சம்பவத்தை அடுத்து மரணமடைந்தவர்களுக்கு நீதி வேண்டி, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.