நாட்டில் பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டி, சாமானிய மக்களை வாட்டி வருகிறது. சம்பளத்தில் பாதியை வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதற்கே செலவிட்டு வருகின்றனர். ஆனால், தெலங்கானாவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலுக்கு பதிலாக வாகனத்தில் தண்ணீர் நிரப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரீம்நகரில் பொம்மகல் பகுதியில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்க்கில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வந்த இளைஞர் ஒருவர், பெட்ரோலின் நிறத்தைப் பார்த்து சந்தேகமடைந்துள்ளார்.
பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் அண்டர்கிரவுண்டில் பிரச்சினை
அதைச் சோதனை செய்ததில், தண்ணீர் என்பதும் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீரைக் கொடுத்து ஏமாற்றுகீறிர்களா எனக் கேள்வி எழுப்பினார்.
பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் வருவதை பார்த்த மற்றவர்களும் அதிர்ச்சியடைந்து, பங்க உரிமையாளருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். மக்கள் ஒன்றுகூடியதால் செய்வதறியாமல் திகைத்த உரிமையாளர், அந்தர்பல்டி அடித்தார்.
அண்டர்கிரவுண்டில் உள்ள பெட்ரோல் டெங்க்கில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, தண்ணீர் வந்திருக்கலாம் எனக் கூறினார். அவரின் பேச்சில் நம்பிக்கை தன்மை இல்லாததால், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்த அலுவலர்கள், அந்த பெட்ரோல் பங்கை தற்காலிகமாக மூடினர். பங்க்கில் உள்ள கசிவு சரியானதையடுத்து, மீண்டும் பெட்ரோல் பங்க் திறக்க அனுமதியளிக்கப்படும் என்றும் அலுவலர்கள் கூறினர்.
இதையும் படிங்க:என்னது டீசல் வருதா.... கேன்களுடன் ஓடிய மக்கள்