உடுப்பி: கர்நாடக மாநிலம், கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள கவுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூலை 20) அப்துல்லா (24) என்ற இளைஞர் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தார்.
அப்போது சாலையில் மயில் ஒன்று ஒருபுறத்திலிருந்து பறந்துவந்து அவர் மீது மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிவந்த அப்துல்லா கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மீது மோதிய மயிலும் அதே இடத்தில் இறந்தது.