தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் 'மோட்டோ ஜிபி' பைக் பந்தயம் - மோட்டோ ஜிபி பந்தயம்

'மோட்டோ ஜிபி' பைக் பந்தயப்போட்டி முதன்முதலாக இந்தியாவில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக இந்தியாவில் நடைபெறும் ’மோட்டோ ஜிபி’ பைக் பந்தயம்
முதன் முறையாக இந்தியாவில் நடைபெறும் ’மோட்டோ ஜிபி’ பைக் பந்தயம்

By

Published : Sep 21, 2022, 4:12 PM IST

டெல்லி: இந்தியாவில் உள்ள மோட்டோஸ்போர்ட் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு 'மோட்டோ ஜிபி' பைக் பந்தயம் முதன்முதலாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. 'கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் பாரத்'(Grand Prix of Bharat) எனும் பெயரில் நொய்டாவில் நடைபெறவுள்ளது.

வரும் ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்தப் பந்தயத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இன்று(செப்.21) மோட்டோ ஜிபியின் வர்த்தக உரிமையாளர் டோர்னா மற்றும் நொய்டாவின் ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் அமைப்பினர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்தப்போட்டியில் 19 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்குபெறவுள்ளனர். மேலும், 'மோட்டோ ஜிபி விரைவில் மோட்டோ ஈ'யையும் இந்தியப் பந்தயத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதை அறிமுகம் செய்வது ஆசியாவிலேயே முதல்முறையாகும்.

மேலும், இந்தப்போட்டி நடைபெறவிருக்கும் நொய்டாவின் 'புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்' பந்தய மைதானம் 'ஃபார்முலா 1 இந்தியன் கிராண்ட் பிரிக்‌ஷ்' பந்தயம் 2011 முதல் 2013 வரை நடைபெற்ற மைதானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அஜய் தேவ்கனின் 'தேங் காட்' படத்தை தடை செய்ய வேண்டும் - ம.பி., அமைச்சர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details