புதுச்சேரி:மேட்டுப்பாளையம் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர், லட்சுமி. இவரது கணவர் வேலு சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
இவர்களது மகன் ஜீவா மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கார் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (செப்.19) மாலை நண்பர்களுடன் சேர்ந்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மீன் பிடித்துவிட்டு ஆற்றில் குளித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமானப் பகுதிக்குச் சென்று மாயமாகியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஜீவாவைத் தேடியும் கிடைக்கவில்லை. வெகுநேரம் கழித்து ஜீவாவின் உடல் கரை ஒதுங்கியது. பின்னர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.