தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓடும் காரில் தாய்க்கு பாலியல் தொல்லை; 10 மாத குழந்தையை வெளியே வீசிய கொடூரம்! - national news

மகாராஷ்டிராவில் வாடகை காரில் சென்றுகொண்டிருந்த தாய்க்கு பாலியல் தொல்லை செய்து, 10 மாத குழந்தையை வெளியே வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் காரில் தாய்க்கு பாலியல் தொல்லை
ஓடும் காரில் தாய்க்கு பாலியல் தொல்லை

By

Published : Dec 11, 2022, 4:20 PM IST

பால்கர்: மகாராஷ்டிரா மாநிலத்தில்பெல்ஹரிலிருந்து போஷேர் எனும் பகுதிக்கு செல்ல ஒரு பெண் தனது 10 மாத பெண் குழந்தையுடன் வாடகை காரில்(Cab) சென்றுள்ளார். அப்போது கார் மும்பை -அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது கார் ஓட்டுநரும் சக பயணிகளும் அவரை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து அந்த பெண் அவர்களை தாக்கியதால், அவரின் குழந்தையை ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து தூக்கி எறிந்ததாகவும், பின்னர் அந்த பெண்ணையும் வண்டியில் இருந்து வெளியே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வெளியே தூக்கி எறியப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது, மேலும் படுகாயம் அடைந்த தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கேப் ஓட்டுநர் விஜய் குஷ்வாஹா மற்றும் அவருடன் பயணித்த, சக பயணிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 13 வயது சிறுவன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details