தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாய் குட்டிகளுடன் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை - சத்தீஸ்கரில் நாய்களுடன் குழந்தை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்த ஒரு சில நாள்களே ஆன பெண் குழந்தையை நாய் குட்டிகளுடன் விட்டுச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

baby with dogs in mungeli
baby with dogs in mungeli

By

Published : Dec 20, 2021, 5:32 PM IST

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் முன்கேலியில் வைக்கோல் போருக்குள் பெண் குழந்தை ஒன்று நாய் குட்டிகளுடன் கிடந்துள்ளது. இதைக் கண்ட ஊர் மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை நலமாக உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குழந்தை நேற்றிரவு நாய் குட்டிகளுடன் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. காலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, மக்கள் குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தையின் தாய், தந்தை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஊர்மக்கள் கூறுகையில், "எங்களது கிராமத்தில் ஒரு வாரமாக மிகுந்த குளிர் அடிப்பதால் மக்கள் வீட்டிற்கு வெளியே தூங்குவதில்லை. இந்த நேரத்தில் வைக்கோல் போருக்கு அடியில் குழந்தையை யாரோ விட்டுச் சென்றுள்ளனர். ஆனால், தாய் நாயும், குட்டிகளும் இரவு முழுவதும் குழந்தையை ஏதும் செய்யாமல் பாதுகாப்பாக கவனித்துள்ளது. ஒரு தாய் நாய்கூட குட்டிகளை விட்டுச் செல்வில்லை, ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:யூடியூப் பார்த்து பிரசவம் - குழந்தை இறந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details